Sunday 14 January 2018

நன்றி கூறும் நன்னாளில் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்- மணிமாறன்


சுங்கை சிப்புட்-
இயற்கை பிரபஞ்சத்திற்கு நன்றி கூறும் வகையில் 'பொங்கல் விழா'   கொண்டாடப்படுகிறது. தன்னுடைய வாழ்வுக்கு அடித்தளமாக விளங்கிடும் சூரியனுக்கும் மாடுகளுக்கும் பொங்கல் வைத்து நன்றி கூறுவதுபோல் நமது வாழ்வின் மேம்பாட்டுக்கு துனை நின்றவர்களை, நிற்பவர்களை என்றுமே நினைவு கூறுவோம் என  சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடிய போகி பண்டிகையில் பழையனவற்றை தீயிட்டு கொளுத்தியதுபோல் நம்முள் இருக்கும் தீய எண்ணங்களையும் பிளவுகளையும் நீக்கி ஒற்றுமையும் சகோதரத்துவத்தையும் வலுபடுத்திக் கொள்வோம்.

'தை பிறந்தால்  வழி பிறக்கும்' என்பதுபோல் இந்த நாளில் அனைவரின் வாழ்விலும் முன்னேற்றம் காண வேண்டும் \என்றார் அவர்.

No comments:

Post a Comment