சுங்கை சிப்புட்-
நாட்டின் அபரிமிதமான வளர்ச்சியில் கல்வியில் புலமை பெறாமல் எதையும் சாதிக்க முடியாது. கல்வியில் சிறந்து விளங்கினால் மட்டுமே மாணவர்கள் தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும் என மதிலன் நிறுவனத்தின் உரிமையாளர் யோகேந்திரபாலன் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு கல்வி மட்டும்தான் முதன்மையானது. அதை விட வேறொன்றும் பெரியதாக இருக்க முடியாது. கல்வியின் சிறந்து விளங்கினால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
ஆகவே, இன்றைய மாணவர்கள் தங்களது முழு கவனத்தையும் கல்வியில் செலுத்தி சிறப்பான தேர்ச்சியை அடைய முனைய வேண்டும். அதுதான் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திறவுகோளாக கல்வி உள்ளது. அதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என இங்குள்ள சோமெல் மாஜு பாலர்பள்ளியின் பொங்கல் நிகழ்வில் கலந்து
கொண்ட யோகேந்திரபாலன் குறிப்பிட்டார்.
இந்த பாலர் பள்ளியில் பயில்கின்ற மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக 13,000 வெள்ளி மதிப்புள்ள திறன் பலகையை (ஸ்மார்ட் போர்ட்) யோகேந்திர பாலன் அன்பளிப்பாக வழங்கினார்.
மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக புத்தாக்க முறையில் போதனை மேற்கொள்ள முயற்சித்தோம். அதற்கேற்ப யோகேந்திரபாலனின் உதவியால் திறன் பலகை வழங்கப்படுள்ளது. நவீன மயமாகிக் கொண்டிருக்கும் சூழலில் மாணவர்களின் கல்வித் தரமும் நவீனமயமாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என இப்பாலர் பள்ளியில் உரிமையாளர் ர.கணேசன் கூறினார்.
இந்நிகழ்வில் திறன் கல்வி அறையை யோகேந்திரபாலன், அவரின் துணைவியார் திருமதி வர்ஷினி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த திறன் பலகை குறித்து ஆசிரியை குமாரி கலைவாணி பிரமுகர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்த பொங்கல் விழாவில் வண்ணம் தீட்டும் போட்டி, கோலப் போட்டி, உறி அடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு யோகேந்திரபாலன், திருமதி வர்ஷினி, சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி பரமேஸ்வரன், சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தின் தலைவர் வீ.சின்னராஜு, மாணவர்கள் பெற்றோர் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment