Wednesday 17 January 2018
வாக்காளர்களாக பதிந்து கொள்ளாத 3.6 மில்லியன் மலேசியர்கள்
புத்ராஜெயா-
21 வயதுக்கு மேற்பட்ட 3.6 மில்லியன் மலேசியர்கள் இன்னும் தங்களை வாக்காளராக பதிந்து கொள்ளவில்லை என தேர்தல் ஆணையத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் கனி சாலே தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு 3ஆம் காலாண்டு வரை தங்களை வாக்காளராக பதிந்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14.8 மில்லியன் ஆகும்.
கடந்தாண்டின் 4ஆம் காலாண்டில் புதிய வாக்காளராக 212,042 விண்ணப்பங்களையும் 72,998 தேர்தல் தொகுதி முகவரி மாற்று விண்ணப்பங்களையும் பெற்றுள்ளது.
புதிய வாக்காளர் பட்டியல் இன்று தொடங்கி 14 நாட்களுக்கு (ஜனவரி 30ஆம் தேதி வரை) நாடு தழுவிய நிலையில் 961 மையங்களி பொது பார்வைக்கு வைக்கப்படும்.
அதோடு கடந்தாண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய வாக்காளர்களாக பதிந்து கொண்டவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment