Sunday 7 January 2018

ஜூன் 11இல் அன்வார் விடுதலை


காஜாங்-
ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு சுங்கை பூலோவில் சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி விடுதலை பெறுகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில்  அறிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வரும் அன்வார் விடுதலை பெறுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. சிறையில் அவர்மீது எவ்வித  பிரச்சினையும் நிலவவில்லை என்றால் ஜூன் 11இல் விடுதலை பெறுவது நிச்சயமாக்கப்படும்.

கடவுளின் ஆசியால் அன்வார் இப்ராஹிம் விடுதலை பெறட்டும் என்று காஜாங், ஸ்ரீ செம்பக்கா மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது வான் அஸிஸா இதனை தெரிவித்தார்.

மேலும், ஓரின புணர்ச்சி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தண்டனை காலம் 2019இல் தான் நிறைவு பெறுகிறது. ஆயினும் அவரின் நன்னடத்தை கருதி மூன்றில் ஒரு பங்கு தண்டனை காலம் குறைக்கப்படுவதால் ஜூன் மாதம் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

இதனிடையே, இந்த சிறைத் தண்டனையால் வரும் 2023 வரை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment