Thursday 25 January 2018

'நாற்காலி வீச்சு': டிஎன்ஏ முடிவுக்காக போலீஸ் காத்திருக்கிறது- எஸ்ஏசி ருஸ்டி


கோலாலம்பூர்-
பந்தாய் டாலாம், ஶ்ரீ பந்தாய் அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்திலிந்து வீசியெறியப்பட்ட 'நாற்காலி' சம்பவம் தொடர்பில் போலீசார் மரபணு சோதனையின் முடிவுக்காக காத்திருப்பதாக  கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு பிரிவின் தலைவர் மூத்த துணை ஆணையர் ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

ஐந்து பேரிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு மாதிரி சோதனையில் இதுவரை எவ்வித சாதகமான நிலையும் காணப்படவில்லை.  இவ்விவகாரம் தொடர்பில் 43 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது எனவும் சம்பந்தப்பட்ட  ஐந்து பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் அவர் சொன்னார்.

வீசியெறியப்பட்ட நாற்காலியில் உள்ள மாதிரியைக் கொண்டு நடத்தப்படும் இந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவு கூடிய விரைவில் கிடைக்கப்படலாம். இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறுந்த பிபிஆர் குடியிருப்பாளர்கள் தகவல்களை போலீசாரிடம் வழங்கலாம்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடவ்ய் 8.30 மணியளவவில் வீசியெறியப்பட்ட 'நாற்காலி' தலையில் விழுந்ததால் 15 வயது சிறுவன் எஸ்.சதீஸ்வரன்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment