Wednesday, 24 January 2018

மரபுக்கு மாறான காவடிகளை ஏந்த வேண்டாம்- டான்ஶ்ரீ நடராஜா அறிவுறுத்து


கோலாலம்பூர்-
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்காக கொண்டாடப்படும் தைப்பூச விழாவில் மரபுக்கு மாறான காவடிகளை ஏந்த வேண்டாம் என ஶ்ரீ மகா மாரியம்ம தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா வலியுறுத்தினார்.

தைப்பூச விழா கொண்டாட்டம் நமது சமய நிகழ்வாகும். இதில் மரபுக்கு மாறான காவடிகள் ஏந்துவது சமயத்தின் நோக்கத்தையே சீரழித்து விடும். அதுவொரு கேளிக்கையாகி விடும்.

இவ்விழாவில் மிகப் பெரிய காவடிகள், கத்திகள், டுரியான், மிளகாய், ஆப்பிள், கால்பந்து கிளப், குண்டர் கும்பல் சின்னம் பொறிக்கப்பட்ட காவடிகளுக்கு அனுமதியில்லை எனவும் அத்தகைய காவடிகள் ஆலயத்தின் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்படும் எனவும் டான்ஶ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment