கோலாலம்பூர்-
துன் டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கடந்த கால தவறுகள் 'மீண்டும்' அரங்கேறும் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கூறினார்.
எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீர் அறிவிக்கப்பட்டுள்ளது பக்காத்தான் கூட்டணியில் தகுதியானவர்கள் இல்லை என்பதை புலப்படுத்துகிறது.
'அவர்களது விருப்பம் மிக பொருத்தமானது. அவர் அதிகாரத்திற்கு மீண்டும் வந்தால், கடந்த கால தவறுகள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும்.
இது பொதுமக்களுக்காக காத்திருக்கும் 'மறுசுழற்சி' ஆகும். பக்காத்தான் ஹராப்பானில் தகுதியான தலைவர்கள் இல்லை என்பதையே பார்க்க முடிகிறது என பேங்க் ரக்யார் மெனாராவில் நடைபெற்ற குற்றத் தடுப்பு கருத்தரங்கில் செய்தியாளர்களிடம் பேசும்போது டத்தோஶ்ரீ ஸாயிட் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment