Tuesday 9 January 2018

பிரதமர் வேட்பாளராக துன் மகாதீர்; இந்திய சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் பிழை- டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர்-
14ஆவது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்திய சமுதாயத்திற்கு மிகப் பெரிய பின்னடைவு  என மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் குறிப்பிட்டார்.

22 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்திய துன் மகாதீரின் தலைமைத்துவத்தில்தான் இந்திய சமுதாயம் மிகப் பெரிய பாதிப்பை எதிர்நோக்கியது.

பொருளாதாரத்திலும், நிபுணத்துவத்திலும் பின்தங்கிய சமூகமாக இந்திய சமுதாயம் உருமாறியதற்கு துன் மகாதீர் கடைபிடித்த இனவாத அரசியலே ஆகும்.  நேர்மையற்ற அரசியல் சித்தாந்தத்தை கடைபிடித்த துன் மகாதீர் 'பூமிபுத்ராக்களுக்கு' மட்டும் சலுகைகளை அள்ளி வழங்கினார்.

அவரின் 'இனவாத அரசியல் சித்தாந்தத்தால்' இந்திய சமுதாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதன் எதிரொலியா கடந்த 2007ஆம் ஆண்டு 'ஹிண்ட்ராஃப்' பேரணி நடத்தப்பட்டது.

ஆளும் அரசாங்கத்தின் வழி பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக பல ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக இந்திய சமுதாயத்திற்காக 'மலேசிய இந்தியர் பெருவரைவு திட்ட'த்தை அமலாக்கம் செய்துள்ளார்.

துன்  மகாதீரை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இந்திய சமுதாயத்திற்கு இழைத்துள்ள மாபெரும் பிழையாகும் என டத்தோ சிவராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment