Sunday 14 January 2018

பொங்கல் குதூகலம்; இறுதிக்கட்ட பரபரப்பில் மக்கள்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள். தங்களுக்கு நல்வாழ்வை அளிக்கவல்ல பொங்கல் திருநாளை வரவேற்கும் இறுதிகட்ட பரபரப்பில் மக்கள் திளைத்துள்ளனர்.

நாளை கொண்டாடவுள்ள பொங்கள் நாளை குதூகலத்துடன் கொண்டாடி மகிழ்வதற்கு ஏதுவாக மக்கள் பொங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

பொங்கல் வைப்பதற்கு தேவையான புதுப்பானை, செங்கல், சர்க்கை, பால், பழங்கள் போன்றவற்றை வாங்க மக்கள் கடைகளுக்கு அலைமோதுகின்றனர்.
இவ்வாண்டு பொங்கலுக்கு மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு, ஒவ்வோர் ஆண்டும் மக்களின் வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. எப்போதும் 2,000 பானைகளை எடுத்து விற்பனை செய்வோம். \
ஆனால் இவ்வாண்டு 1,000 பானைகளை மட்டுமே விற்பனை செய்கிறோம் என  புந்தோங்கில் வர்த்தகம் புரியும் விஜயா குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாண்டு பொங்கல் விழா, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் விடுமுறை நாளில் குடும்பத்துடன் கொண்டாட தயாராகி கொண்டிருப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

எப்போதும் வேலை, பள்ளிக்கூட  நாட்களில் பொங்கல் வருவதால் குடும்பத்துடன் கொண்டாட முடியாத சூழல் இன்று விடுமுறை நாளில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம் என அவர்கள் பூரிப்புடன் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment