Thursday 25 January 2018

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பணியாளர் மரணம்


கோலாலம்பூர்-
கோலாலம்பூரிலிருந்து பண்டோங், இந்தோனேசியா நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் மரணமடைந்துள்ளதை ஏர் ஆசியா விமான நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

அவசர மருத்துவ உதவி காரணமாக ஏகே416  ஜோகூர், செனாய் அனைத்துலக விமான  நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த அவ்வாடவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்க விமானம் தரையிறக்கப்பட்டது. ஆயினும்  அவரை பரிசோதித்த மருத்துவர் அப்பணியாளர் மரணமடைந்ததை உறுதிபடுத்தினார் என ஏர் ஆசியா வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரணமடைந்த ஆடவரின் குடும்பத்தினருக்கு ஏர் ஆசியா வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நாங்கள் வழங்க தயாராக உள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, செனாய் விமான நிலையத்திலிருந்து காலை 9.00 மணியளவில் புறப்பட்ட விமானம், காலை 10.11 மணியளவில்ஹுசேய்ன் சஸ்த்ராநெகாரா விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வேளையில் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என் அந்நிறுவனம் கூறியது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் ஏர் ஆசியா நிறுவனம் போலீஸ் புகார் செய்துள்ளதை கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டன்ட் தெரிவித்தார்.

மரணமடைந்த ஆடவர்  46 வயதுடைய ஆடவர்வ் என்ற அவர், மற்ற விவரங்களை வெளியிடவில்லை.

இதனை திடீர் மரணமாக வகைபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment