ஈப்போ-
அரசாங்கம் நல்ல அரசாங்கம்தான். ஆனால் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய தலைவர்கள் கரை படிந்துள்ளதால்தான் மக்களிடையே அரசுக்கு நல்ல பெயர் கிட்டுவதில்லை என தாமான் ரிஷா ருக்குன் தெத்தாங்கா செயலாளர் சண்முகம் குறிப்பிட்டார்
இந்த குடியிருப்பில் பல தலைவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இங்குதான் குடியிருக்கின்றனர். ஆனால் இங்கு நிலவும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதில்லை.
பராமரிக்கப்படாத திடல், துப்புரவு செய்யப்படாத கால்வாய் என பல்வேறு அடிப்படை பிரச்சினைகளையும் அதனால் ஏற்படுகின்ற சுகாதாரக் கேட்டிற்கும் மக்கள் ஆளாகின்றனர்.
இங்குள்ள தலைவர்கள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டிருந்தால் சுகாதாரப் பிரச்சினைக்கும் சமூக சீர்கேட்டிற்கும் மக்கள் ஆளாகியிருக்க மாட்டார்கள்.
அரசாங்கம் நல்ல அரசாங்கம். ஆனால் மக்களுக்கு களமிறங்கி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தலைவர்கள் தங்களின் கடமையை சரிவர செய்யத் தவறியதன் விளைவாக இங்குள்ள மக்களின் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சேவையாற்றாமல் கறை படிந்தவர்களாக திகழும் தலைவர்களால்தான் அரசாங்கத்திற்குகூட அவப்பெயர் ஏற்படுகிறது என அண்மையில் இங்கு நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றியபோது மலேசிய அபிராம் இயக்கத்தின் தலைவருமான சண்முகம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புந்தோங் தொகுதி மைபிபிபி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங், புந்தோங் தொகுதி மைபிபிபி தலைவர் செபஸ்தியன், பிரிம் இயக்கத்தின் தலைவர் முகமட் அரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment