Thursday 25 January 2018
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்; 6 வாகனங்கள் சேதம்
பெட்டாலிங் ஜெயா-
இன்று மாலை பெய்த கனமழையை தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா, கோம்பாங், சுங்கை பூலோ ஆகிய பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.
பிற்பகல் 4.30 மணியளவில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாக அழைப்புகளை பெற்றதாக தீயணைப்பு, மீட்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மாலை 6.00 மணியளவில் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து கோம்பாக்கில் 6 வீடுகளிலும் சுங்கை குவாங்கில் வங்கி ஒன்றிலும் வெள்ள நீர் புகுந்ததாக அழைப்பு கிடைக்கப்பெற்றது.
இந்த வெள்ளப் பெருக்கினால் ஜாலான் கோலசிலாங்கூர்- சுங்கை பூலோ செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் பெர்சியாரான் சூரியனில் 6 வாகனங்கள் பாதிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் முகமட் ஸானி சே டின் கூறினார்.
இதில் யாரும் காயமடையவில்லை எனவும் 7.00 மணியளவில் வெள்ள நீர் வடிந்ததாகவும் அவர் மேலும் சொன்னார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment