Sunday, 14 January 2018

'பழையன கழிதலும் புதியன புகுதலையும்' கொண்டாடி மகிழ்வோம்- சிவநேசன்


ஈப்போ-
உலகத் தமிழர்களால் கொண்டாடி மகிழும் ஒற்றுமை திருநாளாம் பொங்கல் நாளில் அனைத்து மக்களின் வாழ்விலும் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிலைபெற வேண்டும் என சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

பொங்கி வரும் பாலை போன்று நமது மக்களின் வாழ்வில் புதுமைகளும் குதூகலும் நிலைபெற வேண்டும். உயர்வான பொருளாதாரத்திற்கு வழி அமைத்து தங்களது வாழ்வு மேம்பாடு காண்பதை அனைத்து தமிழர்களும் உறுதி செய்ய வேண்டும்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்பதை வலியுறுத்தும் இப்பொங்கல் நன்னாளில் தெளிவான சிந்தனையை வகுத்து தங்களது வாழ்வின் மேம்பாட்க்கு ஆக்ககரமான திட்டங்களை இந்தியர்கள் வகுத்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment