Tuesday 9 January 2018

'சிறுவன் கடத்தப்பட்டு கொடூர கொலையா?'; அது வெறும் வதந்தியே- போலீஸ் தகவல்

ஜொகூர்பாரு-
ஒரு சிறுவன் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் வெறும் வதந்தியே என ஜொகூர் மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.

 ஒரு சிறுவன் படுத்திருப்பதும் கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் உடல் முழுவதும் தைக்கப்பட்டது போலவும் வாட்ஸ் அப், பேஸ்புக் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் உலா வருகிறது. இதில் அச்சிறுவன் உடல் உறுப்புகள் இல்லாமல் மரணமடைந்திருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு, இரு ஆடவர்களை போலீசார் தேடுவதாகவும் இரு ஆடவர்களின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ள இந்த தகவல் மக்களை குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்துவதாக அமைந்துள்ளது என அவர் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறான தகவலை பரப்புவது 1998 தொடர்பு, பல்லூடக சட்டம் செக்‌ஷன் 233(1)(a) கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த செயலுக்கு 50,000 வெள்ளிக்கு மேல் போகாத அபராதமும் ஓராண்டுக்கு மேல் போகாத சிறைத் தண்டனையும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இதுபோன்ற தவறான, உறுதிப்படுத்தப்படாத தகவலை எளிதில் நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment