Friday 19 January 2018

சதீஸ்வரன் மரணம்; ஐவரிடம் மரபணு மாதிரி சோதனை


கோலாலம்பூர்-
அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீசியெறியப்பட்ட நாற்காலி தலையில் விழுந்ததால் மரணம் அடைந்த எஸ்.சதீஸ்வரன் (வயது 15) மரணம் தொடர்பில் ஐந்து பேரின் மரபணு மாதிரியை போலீசார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு ஶ்ரீ பந்தாய் பிபிஆர் குடியிருப்பின் 16ஆவது மாடியிலிருந்து விசியெறியப்பட்டதாக நம்பப்படும் நாற்காலி, அக்கட்டடத்தின் கீழ் தளத்தில் தனது தாயாருடன் நடந்து சென்று கொண்டிருந்த சதீஸ்வரன் தலையில் விழுந்தது. இதனால் தலையில் கடுமையான காயமடைந்த சதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு பிரிவு தலைமை மூத்த துணை ஆணையர் ருஸ்டி முகமட் இசா, சம்பந்தப்பட்ட ஐவரின் வீடுகளிலும் தேவைக்கு அதிகமான மரச்சாமான்கள் இருப்பதால் அவர்களிடமிருந்து மரபணு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. அந்த நாற்காலியை வீசியவரின் மரபணு அதில் தென்பட்டது என்று சொல்ல முடியாது. முதலில் விசாரணை நடைபெறட்டும்.'

'சம்பவத்தை நேரில் கண்டவர்களிடமிருந்தும் நாங்கள் மரபணு மாதிரி சோதனையை பெறவிருக்கின்றோம். இந்த ஐவரும் சந்தேகத்திற்குரியர்வர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

அலட்சியம் என முதலில் வகைப்படுத்தப்பட்ட சதீஸ்வரனின் மரணம், தற்போது கொலை என வகைபடுத்தப்பட்டுள்ளது. சதீஸ்வரனின் பிரேத பரிசோதனைக்காக போலீசார் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment