Friday 19 January 2018
3 லோரிகள் விபத்து; மூவர் காயம், ஒருவர் தப்பினார்
ஜோகூர்பாரு-
மூன்று லோரிகளை உட்படுத்திய சாலை விபத்தில் மூவர் காயமடைந்ததோடு ஒருவர் எவ்வித காயமும் இன்றி தப்பினார். இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில்வடக்கு- கிழக்கு விரைவு நெடுஞ்சாலையின் ஸ்கூடாய் அருகில் நிகழ்ந்தது.
வீட்டுப் பொருட்களை விற்பனை செய்வதில் பிரசித்தி பெற்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இரு லோரிகளுடன் மற்றொரு லோரி மோதி விபத்துக்குள்ளானதால் அந்த லோரிகள் ஏற்றி வந்த பொருட்கள் சாலையில் சிதறி கிடந்தன.
இவ்விபத்து தொடர்பில் அவசர அழைப்பு வந்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கூலாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூலாய் தீயணைப்பு, மீட்புப் படை நடவடிக்கைக் குழுத் தலைவர் சோலே தெரிவித்தார்.
இந்த விபத்தினால் அச்சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment