Saturday 20 January 2018

தவறான ஒன்றை தேர்ந்தெடுத்தால் நாடே சீரழிந்து விடும்- பிரதமர் நஜிப்


நபாவான் -
ஆளும் அரசாங்கத்தை மாற்றுவது கடினமல்ல; அதில் பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் ஒருமுறை தவறிழைத்தால் நாடே சீரழிந்து விடும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் எளிதில் முடிவெடுக்கக்கூடாது. நாட்டை சிறப்பான முறையில் நிர்வாகம் செய்யும் அரசை தேர்ந்தெடுப்பதில் தவறிழைக்கக்கூடாது.

ஆளும் அரசாங்கம் சீரான, அமைதியான முறையில் நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கத்தை தற்காக்க வேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில் தவறான ஒன்றை தேர்ந்தெடுத்தால் அரசியல் நிலைத்தன்மை ஆட்டம் காண்பதோடு நாட்டின் மேம்பாடு காண முடியாது என சபா, நபாவான் மக்களை சந்தித்து உரையாற்றியபோது டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment