Monday 22 January 2018

புந்தோங்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஒரு வாய்ப்பளியுங்கள் - டத்தோ நரான் சிங்


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால் புந்தோங் தொகுதியையே மாற்றி காட்டுவேன் என இத்தொகுதியின் மைபிபிபி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங்  தெரிவித்தார்.

கடந்த இரு தவணைகளாக இத்தொகுதியில் எதிர்க்கட்சி உறுப்பினர் வெற்றி பெற்று வருகிறார். ஆனால் அவரால் எத்தகைய மேம்பாட்டையும் இத்தொகுதியில் மேற்கொள்ள முடியவில்லை.

இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தகுதி வாய்ந்த, மக்களுக்காக களமிறங்கி பணியாற்றும்  மக்கள் பிரதிநிதியே இங்கு அவசியமாகிறது. அவ்வகையில் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் புந்தோங் தொகுதியின் தற்போதைய நிலையையே மாற்றி காட்டுவேன் என இங்கு தாமான் ரிஷா ருக்குன் தெத்தாங்கா அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இப்பகுதியில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் நிலவுகின்றன. கால்வாய் அடைப்பு, திடல் வசதி இல்லாமை, சமூகச் சீர்கேடுகள் போன்றவை உள்ளன. இவற்றுக்கு உரிய தீர்வு காண தகுதி வாய்ந்த மக்கள் பிரதிநிதி தேவை.
புந்தோங் தொகுதியில் போட்டியிட நான் தயாராகி கொண்டிருக்கிறேன்.

இத்தொகுதியில் போட்டியிட  வாய்ப்பளிக்கப்பட்டால் வேட்பாளராக களமிறங்குவேன், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவேன் என வழக்கறிஞருமான  டத்தோ நரான் சிங் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தாமான் ரிஷா ருக்குன் தெத்தாங்கா தலைவர் லெட்சுமணன்,  தாமான் ரிஷா ருக்குன் தெத்தாங்கா செயலாளர் மலேசிய அபிராம் இயக்கத்தின் தலைவருமான சண்முகம், புந்தோங் தொகுதி மைபிபிபி தலைவர் செபஸ்தியன், பிரிம் இயக்கத்தின் தலைவர் முகமட் அரிப், மலேசிய அபிராம் இயக்கத்தின் செயலாளர் பி.கணேசன், குடியிருப்பாளர்கள் திருமதி தங்கராணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment