ஜோகூர்பாரு-
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மாசாய், பண்டார் ஶ்ரீ அலாமிலுள்ள ஆலயம் உடைபட்ட சம்பவத்திற்கு பின்னர் மாநில அரசு வழங்க முன்வந்துள்ள நிலத்திற்கு மாற்றம் காண ஆலய நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதால் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தனியார் நிலத்தில் அமைந்திருந்த இந்த ஆலயம் கடந்த 11ஆம் தேதி உடைக்கப்பட்டது இந்தியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, உடைபட்ட ஆலயத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கு ஜோகூர் மாநில அரசு 0.404 ஹெக்டர் நிலப்பரப்பை வழங்கியுள்ளது. இந்த நிலத்திற்கு மாற்றம் காண ஆலய நிர்வாகம் முன்வந்ததைத் தொடர்ந்து இவ்வாலயப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆதலால் இந்தியர்கள் உணர்ச்சிவயப்பக்கூடாது என சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்த மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் காலிட் நோர்டின், ஜோகூர் சுல்தான், இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
No comments:
Post a Comment