Monday, 22 January 2018
துன் மகாதீர் முதியவர்தான்; ஆனால் பிரதமர் ஆவதற்கு ஆரோக்கியமாக உள்ளார்- பிபிபிஎம்
பெட்டாலிங் ஜெயா-
துன் டாக்டர் மகாதீர் முகமது முதியவர்தான். ஆனால் மீண்டும் பிரதமராக பதவியேற்று நாட்டை வழிநடத்துவதற்கு வயது ஒரு தடையில்லை என பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ கமாருடின் முகமட் நோர் தெரிவித்தார்.
'வயதானாலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அவர் இருக்கிறார், பழைய நினைவுகள் உள்ளன, தனது அனுபவத்தின் மூலம் இன்னும் துடிப்புடன் செயல்படுகிறார் துன் மகாதீர்.'
அவரின் நிலை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியதில்லை, அவர் எங்கு வேண்டுமானாலும் செல்கிறார், அதிகம் பேச வேண்டியதில்லை. பொதுத் தேர்தல் வரை காத்திருங்கள் என துன் மகாதீர் குறித்து சர்ச்சைக்குரிய போதகர் ஸமிஹான் மாட் ஸிட் கூறியுள்ள கருத்து பதிலடி கொடுத்துள்ளார் டத்தோ கமாருடின்.
22 ஆண்டுகள் நாட்டை வழிநடத்திய துன் மகாதீர் மீண்டும் அரசியலில் நுழைந்துள்ளதும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்டுள்ளதும் தவறான ஒன்றாகும் என ஸமிஹான் கருத்து தெரிவித்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment