Saturday 27 January 2018

ஹீவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியை பார்வையிட்டார் டத்தோ கமலநாதன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டில் 529ஆவது தமிழ்ப்பள்ளியாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் ஹீவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியை கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் பார்வையிட்டார்.

இப்பள்ளியின் நிர்மாணிப்புப் பணிகள் குறித்து கட்டட பொறியியளாளரிடம் கேட்டறிந்த டத்தோ கமலநாதன், அப்பள்ளிக்கூட கட்டட நிர்மாணிப்புகளை பார்வையிட்டார்.

5.5 ஏக்கர் நிலத்தில் 12 வகுப்பறைகள் உட்பட பல அடிப்படை வசதிகளோடு நிர்மாணிக்கப்படவுள்ள இப்பள்ளிக்கூட நிர்மாணிப்புக்கு 6.5 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டுள்ளது எனவும் இவ்வருடம் இறுதிக்குள் பள்ளி கட்டட நிர்மாணிப்பு பூர்த்தி செய்யப்படும் எனவும் டத்தோ கமலநாதன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் ம இகா உதவித் தலைவர்  சண்முகவேலு, செயலாளர் கி.மணிமாறன், எஸ்ஐடிஎஃப் அதிகாரி பிரகாஷ், கட்டடக் குழுவினர், அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment