Saturday 20 January 2018

தேசிய முன்னணியை வெற்றி பெறச் செய்யுங்கள் - யோகேந்திரபாலன் வலியுறுத்து

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த வெற்றிக்காகதான் நான் இங்கு பல மக்கள் சேவைகளை மேற்கொண்டு வருகிறேன் என பூச்சோங் தொழிலதிபரும் மதிலன் நிறுவன உரிமையாளருமான யோகேந்திர பாலன் குறிப்பிட்டார்.

கடந்த இரு தவணைகளாக தேசிய முன்னணி அடைந்துள்ள தோல்வியால் இங்குள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். தங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண யாரை அணுகுவது என தெரியாமல் தவிக்கின்றனர்.

இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே எனது சேவையை தொடர்ந்துள்ளேன். தேசிய முன்னணி வெற்றி பெற்றால் மட்டுமே இங்குள்ள மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதால் தேமு ஆதரவாக நானும் களமிறங்கியுள்ளேன்.

தேசிய முன்னணி வெற்றிக்காக தொகுதி மஇகாவுடன் இணைந்து எனது சேவையை முன்னெடுத்துள்ளேன்.  வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்குபவருக்கு இங்குள்ள மக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என இன்று  இங்குள்ள அரேனாவில் நடைபெற்ற மாபெரும் பொங்கல் விழாவில் யோகேந்திர பாலன் குறிப்பிட்டார்,

மதிலன் நிறுவனம் ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா ஆதரவில் நடைபெற்ற இவ்விழாவில் மாற்றுத்திறனானி சிறுமிக்கு சக்கர வண்டியும், கண் பார்வை பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்காக காசோலையும் யோகேந்திரபாலன் தம்பதியர் வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வில் வண்ணம் தீட்டும் போட்டி, கோலப்போட்டி உட்பட 100 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டன. ரஜினி, கமல், எம்ஜிஆர், சிம்பு, தனுஷ், பரவை முனியம்மா போன்று வேடமிட்ட மலேசிய கலைஞர்கள் நிகழ்வுக்கு வந்தவர்களை மகிழ்வித்தனர்.

No comments:

Post a Comment