Wednesday 3 January 2018

கம்போங் சீமி தமிழ்ப்பள்ளியில் 33 மாணவர்கள்; எண்ணிக்கையில் மாற்றமில்லை


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
கம்போங் சீமி தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதுமில்லை. கடந்தாண்டை போலவே 33 மாணவர்கள் இவ்வாண்டும் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர் என பள்ளி தலைமையாசிரியை திருமதி பைரவி தெரிவித்தார்.
தலைமையாசிரியை பைரவி
இதனிடையே, ஈப்போ தீமோர் மஇகா தலைவர் டத்தோ ஆர். கணேசன் முதலாம்  ஆண்டு மாணவர்கள்க்கு பள்ளி புத்தகப்பைகளை வழங்கியதோடு,  தமிழ்ப்பள்ளிகளுக்கு  தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில் பெற்றோர்கள் தயக்கம் காட்டக்கூடாது எனவும்,  இன்று இந்திய சமூகத்தில் நிரம்பியுள்ள பல வெற்றியாளர்கள்  தமிழ்பள்ளியில் படித்தவர்கள் என்பதை மறக்கக்கூடாது என்றார்.

இதனிடையே, 'பாரதம்' மின்னியல் அகப்பக்கத்திற்கு  தொகுப்புக்கு முதலாம் ஆண்டில் காலடி வைத்துள்ள மாணவர்களின் பெற்றோரிடையே வெளிபட்ட கருத்துகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

* தமிழ்ப்பள்ளியில்  படிக்காத நான் இன்று எனது மகன் கீர்த்திகுமாரை தமிழ்ப்பள்ளியில் சேர்த்துள்ளதை எண்ணி பெருமைப்படுகிறேன் என்று தாயார் பிரேமா தெரிவித்தார்.

*  தன் மகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்றார் தாயார் காயத்திரி.

* இன்றைய காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் வெற்றியாளர்களாக திகழ்வது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தான்.  தன் பிள்ளையும் நாளை ஒரு வெற்றியாளராக வரவேண்டும் என்று எண்ணி தமிழ்ப்பள்ளியை தேர்வு செய்துள்ளேன்  என்கிறார் தாயார் ரூபாதேவி.

* எங்கள் அனைவரது தேர்வும் தமிழ்ப்பள்ளியே ஆகும். எனது பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் பயில்வதை பெருமையாக கருதுகிறேன் என்கிறார் தந்தை முனியாண்டி.

No comments:

Post a Comment