Tuesday, 19 December 2017

கடுமையாக தாக்கி மோதி தள்ளியதில் ஆடவர் பலி; பெட்ரோல் நிலையத்தில் பரபரப்பு


ஜோகூர்பாரு-
பெட்ரோல் நிலையத்தில் மர்ம ஆடவர்களால் குத்தி, காரால் மோதப்பட்ட ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் தாமான் பெலாங்கி பெட்ரோல் நிலையத்தில் நிகழ்ந்தது.

மரணமடைந்த ஆடவரும் அவரது மனைவியும் தங்களது வோல்ஸ்வேகன் காரின் டயரில் காற்றை நிரப்ப வந்தனர். அச்சமயம் வெள்ளை நிற பிஎம்டபிள்யூ காரில் வந்த ஆடவர்கள் சில கணவன், மனைவி இருவரையும் தாக்கியுள்ளனர். மர்ம நபர்களின் தாக்குதலில் இருந்து மனைவி தப்பியோடினார்.

அவ்வாடவரை மர்ம நபர்கள் தாக்கியதோடு சுற்றியிருந்தவர்களை பயமுறுத்த பட்டாசை  கொளுத்தி போட்டதோடு வாகனத்தை செலுத்திய அவர்கள், இருமுறை தங்களது வாகனத்தால் அவ்வாடவரை மோதி தள்ளி தப்பிச் சென்றனர்.

இதில் கடுமையான பாதிக்கப்பட்ட அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றார் என ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் காலில் காடீர் முகமட் தெரிவித்தார்.

ஆடவரை வெறிதனமாக தாக்கி மோதி தள்ளும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment