Friday 8 December 2017

கனரக லோரியை மோதியது பேருந்து: ஓட்டுனர் உட்பட 6 பேர் படுகாயம்


கோலகங்சார்-
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 249.6ஆவது கிலோமீட்டரில் சுங்கை பேராக் ஓய்வு தளத்திற்கு அருகே ஒரு விரைவு பேருந்து கனரக லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் உட்பட அறுவர் படுகாயம் அடைந்தனர்.

கங்காரிலிருந்து கிள்ளானுக்குச் சென்றுக் கொண்டிருந்த இரு அடுக்கு விரைவு பேருந்து மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற 25 டன் டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தின்போது பேருந்து 42 பயணிகளும் இரு ஓட்டுனர்களும் இருந்துள்ளனர். இதில் 37 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அழைப்பு கிடைக்கப்பெற்றதும் கோலகங்சார், மேரு ராயா ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு, மீட்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு பலரை மீட்டனர். இதில் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளியையும் அவசர படிக்கட்டின் வழி மீட்டனர் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment