Sunday 10 December 2017

கடத்தப்பட்ட இந்தியப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்


கிள்ளான் -
மூன்று ஆடவர்களால் கடத்தப்பட்ட இந்திய மாது ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று ஒரு தொழிற்சாலையின் முன்பு மூன்று ஆடவர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்ட எஸ்.ஜோதிமணியை  (வயது 49) இரவு 10.00 மணியளவில் போலீசார் மீட்டனர் என அவரின் சகோதரி எஸ்.சத்தியா கூறினார்.

ஜோதிமணியை கண்ட போலீசார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடம்பில் காயங்கள் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.
சகோதரியை கடத்திய நபர்கள் அவரின் நகைகளை கொள்ளையிட்டு தனியே விட்டுச் சென்றுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.

நேற்றுக் காலை 9.30 மணியளவில் கம்போங் ஜாவாவிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் முன்பு பொருட்களை சேகரிப்பதற்காக வந்த ஜோதிமணியை மூன்று ஆடவர்கள் காரில் கடத்திச் சென்றனர்.

No comments:

Post a Comment