Friday 8 December 2017

பேருந்து விபத்து: ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு


கம்பார்-
மரணம் விளைவிக்கும் வகையில் பேருந்தை செலுத்தியதாக அதன் ஓட்டுனர் மீது இன்று குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுனரான என்.சசிகுமார் (வயது 41) தான் குற்றவாளி என கூறி விசாரணை கோரினார்.

நேற்று வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 294.7ஆவது கிலோமீட்டரில் இரு லோரிகளுடன் பேருந்துமோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் சான் க்வாய் ஃபா (43) மரணமடைந்தார்.

மாஜிஸ்திரேட் நூர் ஃபைசா முகமட் சாலே முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில் ஆஜரான அரசு தரப்பு துணை வழக்கறிஞர் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் தொகை  கூடுதலாக விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால் சசிகுமாருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளதோடு   மனைவியும் வேலைக்கு செல்லாததால் 5,000 வெள்ளி ஜாமீன் தொகையும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பெயரிலும் அடுத்த விசாரணை நடைபெறும் டிசம்பர் 28ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கினார்.

1987 சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41(1)இன் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 20,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
இச்சாலை விபத்தில் 12 பயணிகள் உட்பட லோரி ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர். பேருந்தின் மேல் தளத்தில் அமர்ந்திருந்த க்வாய் ஃபா ஈப்போ பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது மரணமடைந்தார்.

No comments:

Post a Comment