Thursday 7 December 2017

பேருந்து - கனரக லோரி மோதல்- 12 பயணிகள் உட்பட 14 பேர் காயம்


ஈப்போ-
காகிதங்களை ஏற்றிச் சென்ற கனரக லோரியும் இரண்டு அடுக்கு விரைவு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.

கோப்பெங் மாநகர் உருமாற்று மையத்திற்கு அருகில் 294.7ஆவது கிலோமீட்டரில்  இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 12 பயணிகளும் அதன் ஓட்டுநரும் காயமடைந்ததோடு லோரி ஓட்டுனரும் காயமடைந்தார்.

சிங்கப்பூரிலிருந்து ஈப்போவுக்கு வந்துக் கொண்டிந்த போது இப்பேருந்து விபத்துள்ளானது.

இது குறித்து கருத்துரைத்த சிம்பாங் பூலாய் தீயணைப்பு, மீட்புப் படை நிலைய தலைவர் எஸ்.கணேசன், அதிகாலை 5.41 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து 12 படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம்.
பேருந்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஈப்போ பொது மருத்துவனைக்கு அனுப்பப்பட்டனர் என கூறினார்.

No comments:

Post a Comment