Friday 8 December 2017

14ஆவது பொதுத் தேர்தலுக்கு மஇகா தலைவர்களும் உறுப்பினர்களும்...


கோலாலம்பூர் டிச-
பல பிரச்சினைகளுக்குப் பிறகு மஇகா சமரசம் நிலையை அடைந்துள்ளது. தற்பொழுது நடப்பு மஇகா சரியான நிலைப்பட்டில் உறுதியாகவுள்ளது. தேமுவின் மாபெரும் வெற்றிக்கு மஇகா கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பாடுபடுவர் என்று மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

வருகின்ற 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் பலத்தை உறுதி செய்து வெற்றியை தக்க வைக்க இதுவே சரியான தருணம். மஇகாவின் தேவைக்கு ஏற்ப கட்சி உறுப்பினர்களின் பங்களிப்பு கட்சியை எதிரொலிக்கக்கூடும்.

மஇகாவின்  இளைஞர் பிரிவினர், இளைஞர்கள் மத்தியில் கட்சியின் பற்றை விதைக்க வேண்டும் அதேசமயத்தில் அவர்கள் நமது வருங்காலத்  தலைவர்கள் ஆவர். அவர்கள் கட்சியின் மீது அக்கறையும் பற்றும்  கொண்டிருந்தால் மட்டுமே கட்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்ல முடியும். கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் செயல்பட்டால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் அதிகமான இந்தியர்களின் வாக்குகளை மஇகா பெற முடியும் என்று அவர் கூறினார்.

இதனிடையே, நமது வெற்றியை உறுதி செய்து நிரூபிக்க இதுதான் கட்சிக்கு சரியான தருணம்.  சமீபக்காலமாக மஇகா கட்சி தலைவர்கள் நாடு முழுவதும் இந்தியர்களின் வளர்ச்சிக்காக பல முன்னேற்றத் திட்டங்களை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பிரதமர் அண்மையில் அறிவித்த இந்தியர்களுக்கான இந்தியர் மேம்பாட்டு வரைவுத்  திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெற கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்பும் ஆதரவும் மிகவும் அவசியமாகும் என்று பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி வலியுறுத்தினார்.

கட்சியின் நலனுக்காக கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் இதனை முழுக் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். நாட்டின் அரசியல் நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி பெற வழிவகுக்கப்படும் என்றும் அவர் மேலும்  குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment