Saturday 16 December 2017

கலைஞானி கங்கை அமரனுடன் இணைந்து உள்ளூர் பாடகர்கள் களமிறங்குகின்றனர்!


கோலாலம்பூர் டிச16-
ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட இசை நிகழ்ச்சிகள் செய்திருந்தாலும் முதன் முறையாக முழுமையான கலைஞானி கங்கை அமரனின் இசையிலும் எழுத்திலும் உருவான பாடல்களைக் கொண்டு இசைஞானி இளையராஜா - கலைஞானி கங்கை அமரன் இசைப் பயணங்கள் எனும் கருப் பொருளோடு மாபெரும் இசை நிகழ்ச்சியை மலேசியாவில் கலைஞானி பிரம்மாண்டமாக படைக்கவுள்ளார்.

ஆல்சீஸன் இவண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் பிரைதேக்ஸ் எண்டர்பிரைஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அஸ்ராஃப் மற்றும் குணசீலன் ஏற்பாட்டில் தென்இந்தியா சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரனின் என் இனிய பொன் நிலாவே' எனும் இசை நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

கலைஞானி கங்கை அமரன் அவர் தம் ஜென்டில்மென் அர்கெஸ்ட்ரா இசை குழுவினர்களும் தமிழகத்தைச் சேர்ந்த பல பாடகர்களும் சினிமா பின்னனி பாடகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கிடையில், உள்ளூர் பாடகர்களும் கலைஞானியுடன் ஒரே அரங்கில் பாடவுள்ளனர். அதில் உள்ளூர் பாடகர்கள் டத்தின்ஸ்ரீ சைலா நாயர், சாமினி, மைக்கல் ராவ், காயத்திரி தண்டபாணி அவர்களுடைய சுயப் பாடல்களை பாடவில்லை என்றும் முழுக்க அவருடைய பாடலை அவருடன் இணைந்து பாடவுள்ளதாக பாடகரும் இசையமைப்பாளருமான கேஷ் வில்லன்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டுவதற்காக கேஷ் வில்லன்ஸ் தனது பாடலை பிரத்தியேகமாக பாடி சிறப்பிக்கவுள்ளார். அதேவேளையில், உள்ளூர் இளைஞர்களின் படைப்பில் எஸ்.கியுஸ்மி எனும் காணொளி பாடலை கலைஞானி கங்கை அமரன் கரங்களால் அதிகாராப்பூர்வமாக வெளியீடு காணவுள்ளது. இந்த காணொளி பாடலை திரைகேன் பையிண்ட் தயாரித்துள்ளனர். ஷான் இசையிலும் புதுமுக இயக்குனர் நவின் இயக்கத்தில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.



மேலும், மைசூரி குழுமத்தின் உரிமையாளர் டத்தோ சண்முகம் இராமசாமி இந்நிகழ்வின் முதன்மை ஆதரவை வழங்கியுள்ளார். திரைகேன் பையிண்ட்  இந்நிகழ்வின் இணை ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் உள்ளூர் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக வெளியீடு கண்ட வேட்டை கருப்பர் ஐயாதிரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜிகேவின் பிளாக் ஹாந்தேர்ஸ் நிறுவனமும் உள்ளுர் இசையமைப்பாளர் கேஷ் வில்லன்ஸ் இந்நிகழ்விற்கு முழு ஆதரவை வழங்குகின்றனர் என்பதனை நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அஸ்ராஃப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அங்கமாக உள்ளூர் படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிள்ளான், புக்கிட் திங்கியிலுள்ள யாயாசன் செரிபு ஹாராப்பான் கருணை இல்லத்திற்கு இதன் வழி கிடைக்கப்பெறும் நிதியின் ஒரு பங்காக 25% நிதியை வழங்கவுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் பிரைடெக்ஸ் நிருவனத்தின் உரிமையாளருமான எம்.குணசீலன் தெரிவித்தார்.



இதனிடேயை, இந்நிகழ்விற்கு சிறப்பு வருகையாளராக மனிதநேயமாமணிஇரத்தினவள்ளி அம்மையார் மற்றும் பார்மன்றத்தின் தலைவரான டத்தோ சந்திரகுமணன் கலந்துச் சிறப்பிக்கவுள்ளனர்.

இதன் செய்தியாளர் சந்திப்பு பெட்டாளிங் ஜெயாவிலுள்ள லோட்டஸ் உணவகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. உள்ளூர் பாடகர்கள் கேஷ் வில்லன்ஸ், காயத்திரி தண்டபாணி, டாக்டர் புருசோத்தமணன், தூவான் முகமாட் காசிம், தமிழகத்தைச் சேர்ந்த சம்சுடின், டக்டார் முனீஸ்வரன், நாலினி சதாசிவம், எம்.ரதி, “எஸ்.கியுஸ்மிகாணோளி பாடலின் இயக்குனர் நவின், தயாரிப்பு மேலாண்மையாளர் விஜய் கணேசன், செல்வராஜு மற்றும் சிறப்பு பிரமுகர்களும் செய்தியாளர்களும் கலந்துச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு குறித்து மேல் விவரங்களுக்கு, 016-6191786 அல்லது 0143271310 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம். கிள்ளான் வட்டாரத்திலுள்ள மக்கள் நுழைவு டிக்கேட் வாங்க விரும்பினால் கிள்ளான் துங்கு கிள்ளான ஆர்.எம்.சி கேஷ் எண்ட் கேரியிலும் பிரிக்பில்ட்ஸ் சென்னை ஸ்பெஸ் உணவகத்திலும் வாங்கலாம் அல்லது மண்டபத்திலும் வாங்கலாம் என நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களில் ஒருவரான சோஹேல் தெரிவித்தார்.


No comments:

Post a Comment