அரசியல் பிரவேசம் குறித்து டிசம்பர் 31ஆம் தேதி தனது முடிவை அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம் திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை இன்று சந்தித்துள்ள ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார்.
போர் என்றால் அது அரசியல் தான் எனவும் யுத்தத்திற்கு சென்றால் ஜெயிக்க வேண்டும் எனவும் கூறியுள்ள ரஜினி, நான் அரசியலுக்கு வருவது புதிதல்ல; 1996ஆம் ஆண்டு முதலே அரசியலில் உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் ரசிகர்களை இறுதியாக சந்தித்த ரஜினிகாந்த், காலா படபிடிப்பு, மழை வெள்ளம் போன்ற காரணங்களால் ரசிகர்களை சந்திப்பதற்கு காலதாமதம் ஆகியுள்ளது என்றார்.
பல ஆண்டுகளாக ரஜினி அரசியலில் ஈடுபடுவாரா? என்ற எதிர்பார்ப்புக்கு டிசம்பர் 31ஆம் தேதி முடிவு காணப்படலாம்.
No comments:
Post a Comment