Tuesday 12 December 2017

'துன்' என விமர்சித்தது மகாதீரை மட்டுமே; சாமிவேலுவை அல்ல - டத்தோஶ்ரீ தேவமணி

தங்கமணி

கோலாலம்பூர்-
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவை பற்றி தமிழழ் நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மஇகாவின் தேசிய துணைத் தலைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி விவரித்துள்ளார்.

'சாமிவேலு தலைமைத்துவத்தில்தான் உரிமைகளை இழந்தோம்' எனும் தலைப்பில் வெளிவந்த அச்செய்தியில் என்னுடைய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் சாடி நான் கூறிய கருத்து தவறாக பிரசுரிகப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ள தேவமணி, சம்பந்தப்பட்ட அந்நிகழ்வில் மகாதீர் காலத்தில் இந்தியர்களுக்கான இந்தியர்களுக்கான சிறப்பு திட்டங்களோ இல்லாததை தொட்டு பேசினேன். 'துன்' என நான் மகாதீரை குறிப்பிட்டேனே தவிர 'துன்' சாமிவேலுவை அல்ல. இதனை மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள் டத்தோ ந.முனியாண்டி, டத்தோ எஸ்.எம்.முத்து ஆகியோர் உறுதிபடுத்தியுள்ளனர்.

தவறாக பிரிசுரிக்கப்பட்டுள்ள செய்தியால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. 14ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள வேளையில் இதுபோன்ற தகவல்கள் சமுதாயத்தின் நம்பிக்கையை சீர்குலைப்பவையாகும்.

மஇகாவின் மூலம் சமுதாய சேவைகளுக்கு என்னை அறிமுகம் செய்தவர் துன் சாமிவேலு ஆவார். எனது அரசியல் ஆசானாக இருந்து வழிகாட்டும் துன் சாமிவேலு இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவையாகும் என டத்தோஶ்ரீ  தேவமணி தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment