Friday 8 December 2017

"ஒரு மாணவருக்கு 20 வெள்ளி" அரசு வழங்கிட வேண்டும்- சிவகுமார் பரிந்துரை

புகழேந்தி
ஈப்போ-
பள்ளி தவணை தொடங்கும்போது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தக்கூடிய பள்ளி பேருந்து கட்டணத்தை சமாளிக்க ஒரு மாணவருக்கு 20 வெள்ளி சிறப்பு மானியம் வழங்கிட அரசு முனைய வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் குறிப்பிட்டார்.

பொருள் விலையேற்றம், எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் அன்றாடம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் சூழலில் பள்ளி பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் சுமையாகத்தான் உள்ளது.
பள்ளி பேருந்து கட்டண உயர்த்துவதற்கு  எரிபொருள், உபரி பாகங்களின் விலையேற்றத்தை மலேசிய பள்ளி பேருந்து நடத்துனர் சங்க கூட்டமைப்பு காரணமாக காட்டுகிறது.  இந்த  முடிவு நடுத்தர மக்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த புதிய கட்டண கொள்கையால் நகர்ப்புறங்களில் 80 வெள்ளியிலிருந்து 120 வெள்ளி வரையிலும் உட்புறப்பகுதிகளில் 60 வெள்ளியிலிருந்து 80 வெள்ளி வரை கட்டணம் உயர்வு காண்கிறது.

எனவே, மக்களின் சுமையை குறைப்பதற்காக அரசாங்கம் சிறப்பு மானியம் வழங்க வேண்டும். அப்போதுதாம் நடுத்தர வர்க்கத்தினர் நிம்மதி பெருமூச்சு விடுவர் என சிவகுமார் கூறினார்.

No comments:

Post a Comment