புனிதா சுகுமாறன்
கோலாலம்பூர்-
உள்ளூர் அழகி, வெளியூர் அழகி, உலக அழகி என பல்வேறு கோணங்களில் பரிணமித்திருக்கும் அழகுராணி போட்டி முதன்முறை மாறுபட்ட நோக்கத்தில் நடத்தப்படுகிறது.
மாற்று திறனாளிகளிடையே புதைந்துள்ள திறமைகளை வெளிகொணரும் வகையில் வரும் 24ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர், டிபிகேஎல் அரங்கில் நடைபெறவுள்ளது.
காது கேளாத மகளிர்கள் பங்கேற்கும் இந்த மாற்றுத் திறனாளி போட்டியில் 15 பேர் பங்கேற்கவுள்ளனர். மலேசியர்கள் என்ற அடிப்படையில் நடத்தப்படும் இதில் அதிகமானோர் இந்தியப் பெண்கள் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும் என ஏற்பாட்டாளர் ரூபனன் தெரிவித்தார்.
வித்தியாசமான முறையில் நடைபெறும் இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகனான இவர்களின் படைப்புகள் பலரது கவனத்தை ஈர்க்கும். அதிலும் இவர்களின் மேடை நாடகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
மாற்றுத் திறனாளிகளான பெண்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான இந்த நிகழ்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தடுத்து நடக்கும் பிரமாண்ட நிகழ்விலும் பங்கெடுப்பர் என ரூபனன் கூறினார்.
No comments:
Post a Comment