Wednesday, 13 December 2017
40க்கு மேற்பட்ட யூ.பி.எஸ்.ஆர் மாணவர்கள் லம்போர்ஜினி வாகனத்தில் பயணம்
கோலாலம்பூர்-
அண்மையில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை டி.எச்.ஆர் ராகா வானொலி நிலையம் ஏற்படுத்தி தந்துள்ளது. அம்மாணவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் லம்போர்ஜினி வாகனத்தில் பயணக்கும் வாய்ப்பை வழங்கியது.
சுமார் 30க்கு மேற்பட்ட லம்போர்ஜினி வாகனத்தின் உரிமையாளர்கள் அம்மாணவர்களை ஏற்றி ஆஸ்ட்ரோ வளாகத்திலிருந்து சைபர் ஜெயா வரை 25 கிலோ மீட்டர் பயணத்தை மேற்கொண்டார்கள்.
டி.எச்.ஆர் ராகாவின் தலைவர், சுப்ரமணியம் வீரசாமி கூறுகையில், “இந்த மாணவர்கள் தங்களுடைய யூ.பி.எஸ்.ஆர். தேர்வுக்காக மிகவும் கடுமையாக உழைத்துள்ளார்கள். அவர்களது சாதனைகளைப் பார்க்கும் பெருமையாகவுள்ளது. எனவே, இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் டி.எச்.ஆர் ராகா குழுவினர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த லம்போர்ஜினி வாகனத்தின் பயணம் அவர்களுக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்”.
இப்பயணத்தில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் உதயா, ரேவதி, அகிலா, சுரேஷ், கீதா, கவிமாறன், யாசினி, ஜெய் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த லம்போர்கினி பயணத்தில் பங்கேற்க அதிகமான மாணவர்கள் raaga.fm எனும் டி.எச்.ஆர் ராகா அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திற்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். அவற்றுள் 42 மாணவர்கள் மட்டுமே ஏற்பாடு குழுவினர் தேர்ந்தெடுத்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment