Wednesday, 27 December 2017

மலாய்க்காரர்களை மட்டுமே கொண்ட மலேசிய அமைச்சரவை - ஹாடி அவாங்


கோலாலம்பூர்-
மலேசிய அமைச்சரவை என்பது பெரும்பான்மை சமூகம் கொண்ட  மலாய்க்காரர்களை மட்டுமே அமைச்சர்களாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை பாஸ் கட்சி எதிர்கால விருப்பமாக கொண்டுள்ளது என அதன் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம். ஆனால், அவர்கள் நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வரையறுப்பதாக இஸ்லாமிய அறிஞர் அல் மவார்டி என்பவரை மேற்கோள் காட்டி ஹாடி அவாங் கூறியுள்ளார்.

தேசிய தலைவர், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் இஸ்லாமிய நம்பிக்கையில் உறுதிப்பாடு கொண்டிருக்கவேண்டும் என்று இஸ்லாம் வரையறுத்து இருப்பதாக அவர் சொன்னார்.

அரசியல், பொருளாதாரம்,  வாழ்க்கையின் இதர அம்சங்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம் உரிமை வழங்கி இருக்கிறது என்று  பாஸ் கட்சியின் பிரசார ஏடான ஹராக்காவில் ஹாடி அவாங் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment