Tuesday 23 January 2018

அகற்றப்பட்ட நுழைவாயிலை நிலைநாட்ட தவறினால் போராட்டம் வெடிக்கும்- ஜசெக கண்டனம்


மலாக்கா-
மலாக்கா மாநிலத்தில் 'லிட்டல் இந்தியா' என்று அழைக்கப்படும் பண்டார் ஹீலிர் வட்டாரத்தில் பிரதமர் நஜீப் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் வரலாற்றை பறைசாற்றும் மிகப்பெரிய நுழைவாயில், இன்றைய முதல்வர் இட்ரிஸ் ஹாருன் ஆட்சியில் அகற்றப்பட்டுள்ளது இனவாத காழ்ப்புணர்வு அரசியல் உள்நோக்கத்திலா? என மலாக்கா மாநில டி ஏ பி உதவித்தலைவரான ஜி.சாமிநாதன் கேள்வி எழுப்பினார்.

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கப்புரியாக திகழும் மலாக்கா மாநிலத்திற்கு இது நாள் வரை அழகு சேர்த்து வந்த அந்த நுழைவாயில், இன்று மாநில அரசாங்கத்தால் அகற்றப்பட்டு பொழிவிழந்து காணப்படுகிறது என அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய நெகிரி மாநில டிஏபி-யின் செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, தமிழர் பாரம்பரிய சின்னங்களுடன் பிரதிபலிக்கும் இந்த நுழைவாயில்அகற்றப்பட்டதில் அரசியல் தலையீடும், இனவாதமும் காரணமாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

அகற்றப்பட்ட நுழைவாயிலை மீண்டும் அதே இடத்தில் நிலைநாட்ட மாநில அரசு தவறினால், விரைவில் ஒரு மாபெரும் போராட்டத்தை துவக்கி மாநில முதல்வருக்கு கடுமையான நெருக்குதலை கொடுப்போம் எனவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியில்  தமிழர் பாரம்பரிய  அடையாளத்துடன் பிரமாண்ட நுழைவாயில் நிறுவப்படும் என  அவர் உறுதி அளித்தார்.

நன்றி: சிவசீலன்

1 comment: