Thursday 2 November 2017
பாலியல் உறவுக்கு அழைத்த நபர் மஇகாவிலிருந்து நீக்கம்- டத்தோஶ்ரீ சுப்ரா அதிரடி
கோலாலம்பூர்-
தொலைபேசி உரையாடலின்வழி ஓர் இளம் பெண்ணை பாலியல் உறவுக்கு அணுப்பி வைக்குமாறு பெற்ற தாயிடமே கேட்டுக் கொண்ட ஓர் ஆசாமி மஇகாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆசாமியின் குரல் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து மஇகா கிளைத் தலைவரான அக்கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட ஆடவர் மஇகா கிளைத் தலைவர் பதவியிலிருந்தும் மஇகா அடிமட்ட உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கும் முடிவை எடுத்துள்ளேன்.
இச்சம்பவத்தை மஇகா மிக கடுமையாக கருதுவதோடு, இது தொடர்பில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீஸ் துறையின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment