சென்னை-
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை இபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தினகரன் என மூன்று அணிகளாக பிரிந்தது அதிமுக.
கட்சி சிதறியதால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், அச்சின்னத்தை யாருக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.
இந்நிலையில் இன்று இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு வழங்கப்படும் என கூறியுள்ளதாக தெரிகிறது.
இத்தகவலை எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் பக்கமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment