Tuesday 7 November 2017

வெள்ளத்தில் மூழ்கிய பினாங்கு அரசுக்கு வெ. 1 மில்லியன் வழங்கியது சிலாங்கூர் அரசு

சுகுணா முனியாண்டி

ஜோர்ஜ்டவுன் -
பினாங்கு வெள்ளப் பேரிடர் உதவி நிதியாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி ஒரு மில்லியன் வெள்ளியை  உதவி நிதியாக வழங்கினார் .

கடந்த இரண்டு தினாங்களாக சூறாவளி காற்றினாலும்,வரலாறு காணாத வெள்ளத்தினாலும் பினாங்கு மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி நிதி பினாங்கு வாழ் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என சிலாங்கூர் மந்திரி புசார் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இயந்திர வசதிகள் உட்பட 300 தொண்டர்களின் பங்களிப்பையும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார் .

தாம் பினாங்கு மாநிலத்திற்கு ஆதரவு வழங்குவது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் பினாங்கிற்கு வந்துள்ளதாக  கூறிய அவர்,  பினாங்கு மாநில முதல்வர் முதல்வர் தமது கடமையை அவ்வபோது வழங்கி வருவதையும் பாராட்டினார் .

பினாங்கு கொம்தார் பினாங்கு நகரண்மைக் கழக பதிவு கேமராக்கள் அறையில் மாநிலத்திலுள்ள வெள்ளப் பேரிடர் நிலவரங்களை பார்த்த அவர் செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை தெரிவித்தார்

இந்த பிரத்தியேக சந்திப்பின் போது பினாங்கு மாநில நகராண்மைக் கழக தலைவர் டத்தோ மேஜர் மைமுனா, பினாங்கு மாநில செயலாளர் டத்தோஶ்ரீ நஃபரிசான் டாருஸ், உள்ளூர் போக்குவரத்து வெள்ள நிவாரண ஆட்சி மன்ற உறுப்பினார் சாவ் கூன் யாவ், வேளாண்மை தொழில் ,கிராம மேம்பாட்டு சுகாதார துறை ஆட்கிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹார்ட்டின்  உட்பட பலர் உடனிருந்தனர் .

இதனிடையே, பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காட்டிய ஆதரவுக்கும் உதவிகளுக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்

நேற்று காலை தொடங்கி இரவு 7 மணி வரையில் மாநில அளவில் வெள்ள நிவாரண மையங்களில் 3,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment