Tuesday 7 November 2017

மாணவனை தாக்கும் காணொளி; இந்தோனேசியாவில் நடந்தது

கோலாலம்பூர்–
பள்ளி மாணவனை ஆசிரியர் அடித்து, துன்புறுத்தும் சம்பவ காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதைத் தொடர்ந்து, இது மலேசியாவில் நடந்த சம்பவம் அல்ல மாறாக, இந்தோனேசியாவில் நடந்தது என்று கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் மலேசியாவில் நடந்திருக்கின்றது என வாட்ஸ் அப், டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் மலேசியாவில் நடக்கவில்லை என்றும் இது இந்தோனேசியாவில் நடந்த சம்பவம் என்றும் கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment