கோலாலம்பூர்-
'நான் அமைச்சர் ஆவதை தடுக்கவே கேமரன் மலை
நாடாளுமன்றத் தொகுதியை தட்டிப் பறித்தார் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு' என கூறினார் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர்
டான்ஶ்ரீ எம்.கேவியஸ்.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி தங்களுடைய பாரம்பரியம்
என மஇகா கூப்பாடு போடுகிறது. ஆனால் அந்த தொகுதி யாருக்காக உருவாக்கப்பட்டது
என்ற உண்மையை அறிந்தவர் துன் சாமிவேலு மட்டுமே.
துன் மகாதீர் பிரதமராக இருந்தபோது நான் அமைச்சரவையில்
இடம்பெற வேண்டும் என்பதற்காக லிப்பிஸ் நாடாளுமன்றத் தொகுதியை பிரித்து கேமரன் மலை நாடாளுமன்றத்
தொகுதியை உருவாக்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2003ஆம் ஆண்டில் துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகி துன் அப்துல்லா அகமட்
படாவி பிரதமராக பதவியேற்றார்.
அத்தகைய காலத்தில் நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில்
அன்றைய மஇகாவின் தேசியத் தலைவராக இருந்த துன் சாமிவேலு பங்கேற்று இரு தொகுதிகளை மசீசவிடம்
விட்டுக் கொடுத்து கேமரன் மலையை மஇகாவுக்கு கைப்பற்றினார்.
'கேவியஸ் மட்டும் அமைச்சராகக்கூடாது'
எனும் நோக்கில் கேமரன் மலை தொகுதியை மஇகா கைப்பற்றிய உண்மையை டத்தோஶ்ரீ
சாமிவேலு கூற வேண்டும். தம்முடைய இறுதி காலத்திலாவது அவர் உண்மையை
சொல்ல நினைத்தால் அன்று அரங்கேற்றப்பட்ட நாடகம் வெட்ட வெளிச்சமாகும்.
கேமரன் மலை மஇகாவின் பாரம்பரியத் தொகுதி என பிதற்றுவோர்
துன் சாமிவேலுவிடம் உண்மையை கேட்டறிந்து கொள்ளலாம் என நேற்று மைபிபிபி, 'தாய்மொழி' நாளிதழ் ஏற்பாட்டில் மலேசிய தமிழ் பத்திரிகைகள்,
மின்னியல் ஊடக ஆசிரியர்கள், நிருபர்களுடனான தீபாவளி
உபசரிப்பின்போது டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment