Tuesday 7 November 2017

மீட்புப் பணியில் களமிறங்கினார் பேராசிரியர் இராமசாமி

சுகுணா முனியாண்டி- 

பட்டவொர்த்-
பினாங்கு மாநிலத்தில் இதுவரையில் இல்லாத அளவிற்கு பெய்த கடுமையான மழையினல் பாதிக்கப்பட்ட தம்முடைய சட்டமன்றத் தொகுதியில்  நேரடியாக களமிறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பினாங்கு மாநில துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் பி.இராமசாமி
பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக ச் சந்தித்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதோடு, அவர்களுக்கு தேவையான உணவு பொட்டலங்களையும் ஆறுதலும் வழங்கி வருகின்றார் அவர்.
அளவுக்கதிகமாக தேங்கி நின்ற வெள்ள நீரை வடிகால் மூலமாக வெளியாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர்,  மரம் வெட்டும் இயந்திரங்களை கொண்டு சாய்ந்து கிடந்த  மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினார்.

No comments:

Post a Comment