Tuesday 7 November 2017

ஹெலிகாப்டர் விபத்தில் சவூதி இளவரசர் பலி




ரியாத்-
ஏமன் நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவூதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார்.

ஏமன் நாட்டு எல்லை அருகில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் இளவரசர் உயிரிழந்தார்.

சவூதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி வகித்தவர் மன்சூர் பின் மாக்ரோன். இவர் நேற்று அதிகாரிகள் சிலருடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment