Wednesday 22 November 2017
'நம்ப முடியவில்லை': கடன் பிரச்சினையால் கொலை ; தற்கொலையா? - சகோதரர் வேதனை
சுங்கைப்பட்டாணி-
மூன்று பிள்ளைகளை கொன்று தனது அண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கு 'கடன் பிரச்சினை' என கூறப்படுவதை தம்மால் நம்ப முடியவில்லை என மரணமடைந்த சிவராவின் சகோதரர் லோகன்ராவ் தெரிவித்தார்.
நேற்று தனது வீட்டின் அறையில் மூன்று பிள்ளைகளை கொன்று அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் கே.சிவராவ் (வயது 48).
இச்சம்பவத்தில் சி.சஷ்வின் ராவ் (வயது 6), சி.ரகுராம் ராவ் (வயது 5), யகிமா ஶ்ரீ (வயது 8) ஆகியோர் தலையணை கொண்டு மூச்சுத் திணறச் செய்ததால் மரணமடைந்தனர்.
இந்த கொலை, தற்கொலைச் சம்பவத்திற்கு கடன் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என போலீஸ் தெரிவித்தது.
ஆயினும் கடன் பிரச்சினையால் தனது மூன்று பிள்ளைகளையும் கொன்று தனது சகோதரர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை நம்ப முடியவில்லை.
'கடந்த மாதம் அவரை அக்காவின் வீட்டுக்கு அருகில் பார்த்தேன். அப்போது அவர் சகஜமாகவே இருந்தார். அவர் ஏதேனும் கடன் பெற்றுள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை'.
அவர் பணப் பிரச்சினையை எதிர்நோக்கினார் என்பதை நம்ப முடியவில்லை; வீட்டு வாடகையை கூட சிறப்பான முறையில் செலுத்தி வந்தார் என இன்று நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து விவரித்த மாநில குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் துணை ஆணையர் மியோர் ஃபாரிட் அலாத்ராஷ் வாஹிட், சம்பந்தப்பட்ட ஆடவர் தூக்கிட்டுக் கொண்டதால் மரணமடைந்தார் என சவப்பரிசோதனை முடிவில் கூறப்பட்டுள்ளது.
ஏனைய மூன்று சிறார்கள் மரண அறிக்கை ஆய்வியல் கூடத்தில் நிலுவையில் உள்ளது என்றார் அவர்.
இன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment