Tuesday 21 November 2017

டத்தோ கெவின் மொராய்ஸ் கொலை வழக்கு: 6 பேர் தற்காப்பு வாதம் புரியும்படி உத்தரவு

கோலாலம்பூர்-
துணை அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேரும் தற்காப்பு வாதம் புரியும்படி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தற்காப்பு வாதம்  18,19, 21, 26  ஜனவரி 2018-லும்  22,23 பிப்ரவரி 2018-லும்  நடைபெறும் என நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் செக்ஷன் 302இன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னர் தங்களது தற்காப்பு வாதத்தை முன்வைக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி காலை 7.00 மணியிலிருந்து 8 மணிக்குள் கடத்தப்பட்ட  டத்தோ கெவின் மொராய்ஸ் அதே மாதம் 16ஆம் தேதி சிமெண்ட் கலவை நிரப்பட்ட தோம்புக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் குணசேகரன்  ராகவநாயுடு (54), ஆர்.தினேஸ்வரன் (25), ஏகே தினேஸ்குமார் (24), எம்.விஸ்வநாதன் (27), எஸ்.நிமலன் (24), எஸ்.ரவிசந்திரன் (46) ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment