Thursday 9 November 2017

நாளை 9ஆம் தேதி சுவாமி ஶ்ரீ ஐயப்பன் ஆலய மஹா கும்பாபிஷகம்

சுகுணா முனியாண்டி
பினாங்கு-
பினாங்கு மாநிலத்தின் விக்டோரியா ஸ்திரீட்டில் ஹரி ஹர புத்திரன் ஶ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷகம் நாளை 9ஆம் தேதி நடைபெறவுள்ளது என  சுவாமி ஶ்ரீ ஐயப்பன் பக்தர்கள் மன்றத் தலைவர் உ.குகணேஸ்வரன் தெரிவித்தார் .

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி சுவாமி ஶ்ரீ ஐயப்பன் பக்தர்கள் மன்றத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்த ஶ்ரீ ஐயப்பன் ஆலயம் கடந்த 3 வருடத்தில் ஆலய திருப்பணிகளை  சிறப்பாக மேற்கொண்டு நாளை 9ஆம் தேதி வியாழக்கிழமை மஹா குப்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என அவர்  கூறினார்.

9ஆம் தேதி  காலை 8.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதோடு காலை 9.45 மணி முதல் காலை  10.25 வரையில் மஹா கும்பாபிஷாகம் நடைபெறும். பின்னர்  சிறப்பு பூஜைகள், மஹேஸ்வரை பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

கலியுக வரதன் சுவாமி ஶ்ரீ  ஐயப்பன்  தரிசனத்தை பெற அனைத்து பக்தர்களையும் வரவேற்பதாக மன்றத்தின் சார்பாகவும் ஆலய சார்பாகவும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment