ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றினால்
இம்மாநிலத்திலுள்ள பல தமிழ்ப்பள்ளிகள் மூடுவிழா காணலாம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்.
இம்மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் அமைந்துள்ள நிலத்திற்கான
ஒப்பந்த கால வரம்பு முடிவு பெற்றுள்ள நிலையில் மாநில அரசு அப்பள்ளிகளை தற்காத்து வருகிறது.
மக்களின் மீதும் இந்தியர்கள் மீதும் பரிவு கொண்டுள்ள
சிலாங்கூர் மாநில அரசு, தமிழ்ப்பள்ளிகளை காப்பதில் உறுதி கொண்டுள்ளது.
அதனாலேயே ஒப்பந்த கால வரம்பு முடிவுற்ற போதிலும் அப்பள்ளிகள் மூடுவிழா
காணப்படாமல் தற்காக்கப்பட்டு வருகிறது.
இதுவே இம்மாநிலத்தை தேசிய முன்னணி ஆட்சி செய்தால்
ஒப்பந்த கால வரம்பு முடிவுற்ற பள்ளிகள் இந்நேரம் மூடுவிழா கண்டிருக்கும்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் அரணாக
தற்போதைய பக்காத்தான் அரசு திகழ்கிறது. அடுத்து வரும் பொதுத்
தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் சிலாங்கூரை கைப்பற்றினால் பல தமிழ்ப்பள்ளிக்கு ஆபத்து
என 'பாரதம்' மின்னியல் ஊடகத்துடனான சிறப்பு
நேர்காணலின்போது கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினருமான கணபதி ராவ் தெரிவித்தார்.
கணபதிராவுடனான சிறப்பு நேரகாணல் வெகு விரைவில் 'பாரதம்' மின்னியல் ஊடகத்தில் விரிவாக இடம்பெறும்.
No comments:
Post a Comment