Monday 13 November 2017
தேமு வேட்பாளரை தோற்கடித்தது மக்களுக்கே பெருநஷ்டம்- டத்தோஶ்ரீ ஸாயிட்
கோ.பத்மஜோதி, புனிதா சுகுமாறன்
சுங்கை சிப்புட்-
தேசிய முன்னணி வேட்பாளரை தோல்வியடையச் செய்ததால் சுங்கை சிப்புட் மக்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இனிவரும் தேர்தலில் இதுபோன்ற தவற்றை மீண்டும் இழைக்கக்கூடாது என்பதை இங்குள்ள மக்கள் உணர வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி வலியுறுத்தினார்.
கடந்த இரு தவணைகளாக இத்தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர்கள் (மஇகா பிரதிநிதிகள்) தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் தோல்வி இங்குள்ள மக்களுக்குதான் பெரு நஷ்டமே தவிர வேட்பாளர்களுக்கு அல்ல.
இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேமு பிரதிநிதி இல்லாத காரணத்தினால் அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய மானியமும் சலுகைகளும் மக்களை சேர்வதில்லை.
தேமு வேட்பாளரை தோற்கடிக்கும் செயலை மீண்டும் அரங்கேற்ற வேண்டாம். அது இங்குள்ள மக்களுக்கே மீண்டும் நஷ்டமாக அமையலாம் என இங்கு கால்நடை வளர்ப்பு மையத்தில் (இன்போதெர்னாக்) நடைபெற்ற தேசிய நிலையிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் கலந்துப் கொண்டு உரையாற்றுகையில் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி இவ்வாறு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment