Sunday 12 November 2017

பினாங்கு வெள்ளம்: மேம்பாட்டுத் திட்டங்கள் காரணமல்ல- லிம்


ஜோர்ஜ்டவுன் -
பினாங்கில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இயற்கை பேரிடரே காரணம் என கூறிய மாநில முதல்வர் லிம் குவான் எங், இங்கு மேற்கொள்ளப்படுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் காரணமல்ல தெரிவித்தார்.

இயற்கை பேரிடருக்கும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவ்விவகாரத்தில்  மக்களின் கருத்துகளை செவிமடுக்க தயாராக இருக்கின்றோம். இயற்கை பேரிழிவுகள் மீது கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.

அண்மையில் பினாங்கிற்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப் துன் ரசாக், மலைபாங்கான இடங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு மாநில அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என கூறியிருந்தார்.

No comments:

Post a Comment